தமிழக போலீசார் என்கவுண்ட்ட Vs பல்வால் கொள்ளை கும்பலை
நாமக்கல் என்கவுண்ட்டர்.. குண்டு காயத்துடன் கோவை அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றவாளி! என்ன காரணம்
கேரளாவில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை குறிவைத்து ரூ.68 லட்சம் கொள்ளையடித்த பல்வால் கொள்ளை கும்பலை தமிழக போலீசார் நாமக்கல் மாவட்டத்தில் என்கவுண்ட்டர் செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் பலியான நிலையில் இன்னொருவர் குண்டு காயமடைந்தார். மொத்தமாக 6 பேர் சிக்கிய நிலையில் குண்டு காயமடைந்தவர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் இன்று காலையில் 2 பைக், ஒரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பொதுமக்கள் சந்தேகமடைந்து பைக்குகளில் விரட்டி சென்றனர்.போலீசாரும் வாகனங்களில் கண்டெய்னர் லாரியை விரட்டி சென்றனர். லாரியில் இருந்தவர்கள் கற்களை வீசி தாக்கிய நிலையில் வெப்படை என்ற இடத்தில் போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர். டிரைவர் ஜூமான் உள்பட five பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்பிறகு லாரியை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு எடுது்து சென்றனர். அப்போது கண்டெய்னரில் இருந்து சத்தம் வந்தது. தோப்புக்காடு பகுதியில் லாரியை நிறுத்தி போலீசார் பார்த்தனர். அப்போது கண்டெய்னர் உள்ளே வெள்ளை நிறத்தில் கார் நின்றது. அதேபோல் 2 பேர் இருந்தனர். ஒருவரை போலீசார் பிடித்தனர்.
மற்றொருவர் பேக்குடன் ஓடினார். அதேபோல் டிரைவர் ஜூமானும் போலீசை தாக்கிவிட்டு எஸ்கேப் ஆக முயன்றனர். விரட்டிய போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜூமான் இறந்தார். அஷ்ரூ காலில் குண்டு காயமடைந்தார். மொத்தம் 7 பேர் கைதான நிலையில் ஜூமான் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர். மற்ற 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் கேரளா மாநிலம் திரிச்சூரின் புறநகர் பகுதியில் 25 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் three ஏடிஎம்களில் இனு்று காலையில் ஒரு கும்பல் கொள்ளையடித்தது. மாப்ரனம் பிளாக் சந்திப்பு, நாய்க்கனல் சோர்னூர் ரோடு, கொலாழி பகுதியில் உள்ள three எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நுழைந்த கும்பல் கேமராவில் ஸ்பிரே அடித்து ரூ.68 லட்சத்தை கொள்ளையடித்து வெள்ளை நிற கிரிட்டா காரில் தப்பியது தெரியவந்தது. அதன்பிறகு அந்த காரை கண்டெய்னர் லாரியில் ஏற்றி தமிழகத்துக்கு தப்பி வந்தது தெரியவந்தது.
இவர்கள் ஹரியானாவில் பல்வால் மற்றும் நூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கார், கண்டெய்னர் லாரி, அதில் இருந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தான் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அஷ்ரூ குண்டுகாயமடைந்து நாமக்கல்லில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்
Priya Ravi
followed by